யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
எண்ணெய் அதிகாரிகள் ஸ்டிரைக் : கடும் நடவடிக்கைக்கு உத்தரவு
புதுடெல்லி (ஏஜென்சி), 9 ஜனவரி 2009   ( 16:47 IST )
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களின் அதிகாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல், டீஸல் உள்ளிட்ட எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பிரச்சனையை தீர்க்க டும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் பெட்ரோலியத் துறை அமைச்சக செயலரையும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.எடுக்கப்படவும் செய்யும்.

மத்திய அமைச்சரவை செயலர் கே.எம். சந்திரசேகர் தலைமையிலான நெருக்கடி கால நிர்வாகக் குழு, நிலைமையை சமாளிக்க சில முடிவுகளை மேற்கொண்டுள்ளன.அந்த முடிவுகள் குறித்து மாநில அரசுகளுக்கும்,அந்த முடிவுகளை அமல்படுத்தும் அந்தஸ்தில் உள்ள இதர அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்படும்.

பொதுத் துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தின் மூலமாக பொருளாதாரத்தை முடமாக்கக் கூடாது.சம்பள உயர்வு தொடர்பான அவர்களது குறைகளை தீர்ப்பது குறித்து பேச்சு நடத்துவதற்காக மத்திய அரசு திறந்த மனதுடன் இருப்பதால் அதிகாரிகள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும்.

பெட்ரோலியத் துறை அதிகாரிகளின் வேலை நிறுத்தப்போராட்டத்தால் நாட்டில் எங்கேயுமே எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று என்னால் உறுதியளிக்க முடியாது.அதே சமயம் நிலைமையை சமாளிக்கத் தேவையான ஒவ்வொரு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுத்தான் வருகிறது.

இருப்பினும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் வழக்கம்போல் செயல்படுகிறது.பாத் பெட்ரோலியம் 70 சதவீத பணியாளர்களின் வருகையுடன் இன்று காலை முதல் செயல்படுகிறது.இதில் மேலும் முன்னேற்றம் ஏற்படலாம் என்று சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாரத் பெட்ரோலியம் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்
லாரி ஸ்டிரைக் : காய்கறி விலை 2 மடங்கு ஆனது!
லாரி ஸ்டிரைக் : 'எஸ்மா' சட்டம் பாய்ந்தது
சத்யம் தலைமை நிதி அதிகாரி தற்கொலை முயற்சி
நந்திகிராம் இடைத்தேர்தல் : திரிணமுல் காங்கிரஸ் வெற்றி!
அத்வானிக்கு எதிராக ஷெகாவத் போர்க்கொடி
செய்திகள்
தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...