|
| லாரி ஸ்டிரைக் : காய்கறி விலை 2 மடங்கு ஆனது! |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009 ( 14:20 IST ) | |
லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் காய்கறி விலையும் இரு மடங்காக உயர்ந்துள்ளது.
டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க கோரி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக டேங்கர் லாரி உரிமையாளர்களும் போராட்டத்தில் குதித்ததால், நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று 5ம் நாளாக நீடிக்கும் நிலையில், காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
டெல்லி, மும்பை போன்ற வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை தொடர்ந்து, காய்கறி விலைகள் இரு மடங்காக அதிகரித்திருப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் காய்கறி விலைகளும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால், குடும்பத் தலைவிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்ற மத்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|