யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சத்யம் தலைமை நிதி அதிகாரி தற்கொலை முயற்சி
ஐதராபாத் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009   ( 13:36 IST )
மோசடி குற்றச்சாற்றுக்குள்ளான சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஸ்ரீனிவாஸ் வட்லாமணி தற்கொலைக்கு முயன்றதாதகவல்கள் வெளியாகி உள்ளன.

பல்வேறு முறைகேடுகள் மற்றும் சுமார் 7,000 கோடி நிதி மோசடியைத் தொடர்ந்து சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ராமலிங்க ராஜூ நேற்று முன்தினம் பதவி விலகினார்.மேலும் நிதி மோசடியையும் அவர் ஒப்புக்கொண்டார்.

இதனால் சத்யம் நிறுவனத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்துள்ளது.அத்துடன் தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டியிலிருந்து சத்யம் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சத்யம் நிறுவனராக ராமலிங்க ராஜூ இருந்தபோது நடந்த நிதி மோசடிக்கு அந்நிறுவனத்தின் பல்வேறு உயரதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது.குறிப்பாக அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் ஆடிட்டர்கள் மீது கடுமையாக குற்றம்சாற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த ஸ்ரீனிவாஸ், ராஜினாமா கடிதத்தை தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரி மைனாம்பதிக்கு அனுப்பி வைத்தார்.அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்பது குறித்து வருகிற 10 ஆம் தேதி நடைபெறவுள்ள சத்யம் நிறுவனத்தின் இயக்குனர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என மைனாம்பதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களாக தலைமறைவாக இருந்து வரும் தலைமை நிதி அதிகாரி ஸ்ரீனிவாஸ் வட்லமணி, அமீர்பேட்டை என்ற இடத்தில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டில் தங்கியிருந்தபோது இன்று காலை தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆனால் அவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நந்திகிராம் இடைத்தேர்தல் : திரிணமுல் காங்கிரஸ் வெற்றி!
அத்வானிக்கு எதிராக ஷெகாவத் போர்க்கொடி
சிதம்பரத்தின் அமெரிக்கப் பயணம் தாமதம்
ஆதரவு வாபஸ்: அரசுக்கு சமாஜ்வாடி மிரட்டல்
வாஜ்பாய் தொகுதியில் போட்டியிடுகிறார் சஞ்சய் தத்
ராகுல் பிரதமராகும் நாள் வெகுதூரமில்லை: பிரணாப்
செய்திகள்
வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...