|
| நந்திகிராம் இடைத்தேர்தல் : திரிணமுல் காங்கிரஸ் வெற்றி! |
| நந்திகிராம் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009 ( 13:36 IST ) | |
மேற்குவங்கத்தில், நந்திகிராம் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்றுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் சட்டசபைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்எல்ஏவாக இருந்தவர் முகமது இலியாஸ். இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டதால் சமீபத்தில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் காரணமாக, காலியாக இருந்த நந்திகிராம் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டதால், பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் தேர்தல் நடைபெற்றது.
மொத்த 6 பேர் போட்டியிட்ட இத்தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பரமானந்த பாரதிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரோசா பீபிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.
இந்த தேர்தலில் மொத்தம் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிரோசா பீவி 9,551 வாக்குகள் பெற்று அமோக வெற்றிப் பெற்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|