|
| அத்வானிக்கு எதிராக ஷெகாவத் போர்க்கொடி |
| புதுடெல்லி (ஏஜென்சி), 9 ஜனவரி 2009 ( 11:23 IST ) | |
கட்சி தடுத்தாலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் அறிவித்துள்ளார். பிரதமர் பதவிக்கு அவர் குறிவைத்திருப்பதால் அத்வானிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சரான பைரோன் சிங் ஷெகாவத், பாஜக சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். எதிர் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஆனால், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவது 'கங்கையில் குளித்து விட்டு மீண்டும் கிணற்றில் குளிப்பதற்கு சமம்' என்று, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராஜ்நாத் சிங் கருத்திற்கு ஷெகாவத் பதிலடி தந்துள்ளார். இது குறித்து டெல்லியில் அவர் கூறுகையில், பிரதமர் வேட்பாளராக அத்வானியை அறிவித்து விட்டால், அவர் மட்டும் தான் போட்டியிட வேண்டும் என்று கூற முடியாது என்றார்.
கட்சியின் மூத்த் தலைவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் தேர்தலில் போட்டியிடும் உரிமை உண்டு என்றும், வயது அடிப்படையில் கட்சியில் மூத்த தலைவர் தாம்தான் என்றும் கூறியுள்ளார்.
மக்கள் விரும்பினால், உடலும் ஒத்துழைத்தால் எதிர்வரும் தேர்தலில் கட்சித் தலைமை தடுத்தாலும் போட்டியிடத் தீர்மானித்திருப்பதாக, ஷெகாவத் மேலும் சொன்னார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றினால், அப்போது பிரதமர் பதவிக்கும் போட்டியிட ஷெகாவத் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
கட்சித் தலைமைக்கும், அத்வானிக்கும் எதிராக மூத்த தலைவரான ஷெகாவத் போர்க்கொடி உயர்த்தியிருப்பது அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|