யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சிதம்பரத்தின் அமெரிக்கப் பயணம் தாமதம்
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009   ( 10:48 IST )
உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மேற்கொள்ளவிருந்த அமெரிக்க சுற்றுப் பயணம் மேலும் தாமதமாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தொடர்பு குறித்த ஆதாரங்களுடன், உள்துறை அமைச்சர் சிதம்பரம் இந்த வாரத்தில் அமெரிக்காவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அவரது பயணம் தள்ளிப் போகும் என்று தெரிகிறது. தற்போது எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும் அமைச்சர்கள் குழுவில் சிதம்பரமும் இடம் பெற்றுள்ளார். இதுவே சிதம்பரத்தின் அமெரிக்கப் பயணம் தாமதமாவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், அமெரிக்காவில் ஒபாமா தலைமையில் புதிய அரசு பதவி ஏற்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாகவும் சிதம்பரம் அமெரிக்கா செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆதரவு வாபஸ்: அரசுக்கு சமாஜ்வாடி மிரட்டல்
வாஜ்பாய் தொகுதியில் போட்டியிடுகிறார் சஞ்சய் தத்
ராகுல் பிரதமராகும் நாள் வெகுதூரமில்லை: பிரணாப்
லாரி உரிமையாளர்களின் போராட்டம் 4 ஆவது நாளாக நீடிப்பு
உ.பி.யில் கடுங்குளிர்: பலி எண்ணிக்கை 60 ஆனது!
தமார் இடைத்தேர்தல்: சோரனுக்கு பின்னடைவு
செய்திகள்
வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...