|
| ஆதரவு வாபஸ்: அரசுக்கு சமாஜ்வாடி மிரட்டல் |
| புதுடெல்லி (ஏஜென்சி), 9 ஜனவரி 2009 ( 10:10 IST ) | |
மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாக சமாஜ்வாடி கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.
டெல்லியில் நேற்று கூடிய சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகளின் அவசரக் கூட்டத்தில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வது தொடர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்கானுக்கு எதிராக போர் உள்ளிட்ட எவ்வித கடும் நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளாததற்கு இக்கூட்டத்தில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்குப்பின் சமாஜ்வாடி பொதுச் செயலாளர் அமர்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் திரும்பப் பெற்றதும், சமாஜ்வாடி கட்சி ஆதரவுக்கரம் நீட்டியது.
மக்கள் நலன் சார்ந்த பிரச்னை அடிப்படையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறோம். ஆனால், நாட்டுக்கு எதிரான பயங்கரவாதச் சவாலை எதிர்கொள்வதில் அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை.
மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னரும் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எவ்வித உறுதியான, கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.
மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளை ஒப்படைக்கும் விவகாரத்தில், அடுத்த ஒரு வாரத்திற்குள் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதற்கு உடன்படாவிட்டால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதைத் தவிர எங்களுக்கு வேறுவழியில்லை. வரும் 14ஆம் தேதி நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அமர்சிங் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|