|
| வாஜ்பாய் தொகுதியில் போட்டியிடுகிறார் சஞ்சய் தத் |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009 ( 17:05 IST ) | |
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ( லக்னோ ) தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக சஞ்சய் தத் போட்டியிட உள்ளார்.
இத்தகவலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங் லக்னோவில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒருவேளை சஞ்சய் தத் மீதான கிரிமினல் வழக்குகள் காரணமாக அவர் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டால், அதனை எதிர்த்து தமது கட்சி தேர்தல் ஆணையத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ அணுகும் என்று அமர்சிங் தெரிவித்தார்.
தம்மை தனது மூத்த சகோதரர் போல தாம் கருதுவதாக சஞ்சய் தத் தம்மிடம் தெரிவித்ததாகவும் அமர்சிங் மேலும் கூறினார்.
சஞ்சய் தத் அரசியல்வாதி இல்லை என்றபோதிலும் தாம் கேட்டுக்கொண்டால் தமக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக தத் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|