யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
லாரி உரிமையாளர்களின் போராட்டம் 4 ஆவது நாளாக நீடிப்பு
புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009   ( 14:12 IST )
நாடு தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டம் இன்று நான்காவது நாளாக நீடிக்கிறது.

லாரி உரிமையாளர்களும்,மத்திய அரசும் தங்களது நிலையிலிருந்து இறங்கி வர மறுப்பதால் இரு தரப்பிலுமே வேலை நிறுத்தம் முடிவுக்கு வராமல் நீடிக்கிறது.

லாரிகள் ஓடாததால் சர்க்கரை, உருளைக்கிழங்கு போன்றவற்றின் முக்கிய விற்பனை சந்தைகள் மூடிக்கிடக்கின்றன.மேலும் உணவு பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்வதும் பாதிக்கப்பட்டுள்ளன.அதே சமயம் இவற்றின் விலை பெரிய அளவில் அதிகரிக்காமல் பழைய விலையே நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு தரப்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால், அரசியல் கட்சிகளின் தயவை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரியுள்ளனர்.

லாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், தங்களது கோரிக்கையை நிறைவேற்ற ஆதரவு கோரி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உ.பி.யில் கடுங்குளிர்: பலி எண்ணிக்கை 60 ஆனது!
தமார் இடைத்தேர்தல்: சோரனுக்கு பின்னடைவு
பயங்கரவாதிகள் நாட்டை சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது: பிரதமர்
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்கு
புலனா‌ய்வு ஏஜென்சி : முத‌ல்வ‌ர்களுட‌ன் ‌சித‌ம்பர‌ம் ஆலோசனை
ஜ‌ம்மு - கா‌ஷ்‌‌மீ‌ர் : 7ஆவது நாளாக‌ என்கவுண்டர் நீடிப்பு
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...