யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
உ.பி.யில் கடுங்குளிர்: பலி எண்ணிக்கை 60 ஆனது!
புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009   ( 14:10 IST )
த்தரபிரதேசத்தில் நிலவி வரும் கடுங்குளிருக்கு பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

வடமாநிலங்களில் தற்போது கடுங்குளிர் நிலவுகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் வழக்கத்தை விட, இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. மக்கள் பகல் நேரத்திலும் குளிரில் நடுங்கி கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக, பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

கடந்த இரு தினங்களில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

அலகாபாத் மற்றும் பெடாபுர் நகரங்களில் தலா 4 பேர் பலியாகியுள்ளனர். சோனேபத்ரா பகுதியில் 2 பேர் உயிரிழந்தனர். லக்னோ நகரில் கடும் குளிரை தாங்கமுடியாமல் நேற்று மட்டும் 10 உயிரிழந்தனர்.

இதனால் மாநிலம் முழுவதும் குளிருக்கு பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

வாரணாசியில் 10 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவுகிறது. லக்னோவில் 8 டிகிரியாகவும், ஆக்ராவில் 7 டிகிரியாகவும் வெப்பநிலை உள்ளது. முஸாஃபர்நகரில் வெப்பநிலை 5 டிகிரியாக குறைந்துள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமார் இடைத்தேர்தல்: சோரனுக்கு பின்னடைவு
பயங்கரவாதிகள் நாட்டை சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது: பிரதமர்
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்கு
புலனா‌ய்வு ஏஜென்சி : முத‌ல்வ‌ர்களுட‌ன் ‌சித‌ம்பர‌ம் ஆலோசனை
ஜ‌ம்மு - கா‌ஷ்‌‌மீ‌ர் : 7ஆவது நாளாக‌ என்கவுண்டர் நீடிப்பு
பெட்ரோல், டீஸல் விலை குறைக்கப்படும் : தியோரா
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...