யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
தமார் இடைத்தேர்தல்: சோரனுக்கு பின்னடைவு
ராஞ்சி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009   ( 13:39 IST )
ஜார்கண்ட்டில் தமார் தொகுதிக்கான இடைத்தேர்தலில் முதல்வர் சிபுசோரனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் தமார் சட்டசபை தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் எம்எல்ஏவாக இருந்த ரமேஷ் சிங் முன்டா, கடந்த ஜூலை 9ம் தேதி மாவோஸ்ட் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது.

இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரும், மாநில முதல்வருமான சிபுசோரனும், அவரை எதிர்த்து ஜார்க்கண்ட் கட்சியை சேர்ந்த கோபால் கிருஷ்ண பதாரும் போட்டியிட்டனர்.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. 3 சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கையின் முடிவில், சிபுசோரன் தனது போட்டி வேட்பாளரை விட 1,900 வாக்குகள் பின் தங்கியிருந்தார்.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவு பற்றிய இறுதி நிலவரம் இன்று பிற்பகலில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பயங்கரவாதிகள் நாட்டை சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது: பிரதமர்
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்கு
புலனா‌ய்வு ஏஜென்சி : முத‌ல்வ‌ர்களுட‌ன் ‌சித‌ம்பர‌ம் ஆலோசனை
ஜ‌ம்மு - கா‌ஷ்‌‌மீ‌ர் : 7ஆவது நாளாக‌ என்கவுண்டர் நீடிப்பு
பெட்ரோல், டீஸல் விலை குறைக்கப்படும் : தியோரா
'பயங்கரவாத குழுக்களை அழிக்க அனைத்து வாய்ப்புகளும் பரிசீலனை'
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...