|
| பயங்கரவாதிகள் நாட்டை சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது: பிரதமர் |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009 ( 13:13 IST ) | |
நாட்டில் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் பயங்கரவாதிகளின் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியத் தொழில் முனைவோர் மாநாட்டை (பிரவாசி பாரதிய திவஸ்), பிரதமர் மன்மோகன்சிங் இன்று காலை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இம்மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:
நமது நாட்டின் சமூக, அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் விதமான பயங்கரவாத செயல்களை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.பயங்கரவாதிகள் பாதுகாப்பாக உள்ள இடங்களை ஒழிக்க சர்வதேச நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்றும்.
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் தொழில் துவங்கவும் பயிற்சி பெற முன்வர வேண்டும்.
உலகளாவிய அளவில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்ட நிலையிலும் இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது. இவ்வாண்டு பொருளாதார வளர்ச்சி, உலக நாடுகளில் அதிக அளவாக 7 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் நமது பொருளாதாரம் மேலும் வளரும்.
ஜி- 20 மாநாட்டில் இந்தியா ஆக்கப்பூர்வமாக பணியாற்றியது. புதிய உலகாளாவிய பொருளாதாரக் கட்டமைப்பை உண்டாக்குவதில் முக்கியப் பங்காற்றியது. புதிய சவால்களுக்கு ஏற்ப கட்டமைப்புகளை உருவாக்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், அங்கு அமைதியும் இயல்பு நிலையும் திரும்ப அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
இம்மாநாட்டில் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் வயலார் ரவி ஆகியோர் பேசினர். சுரினாம் நாட்டு துணை அதிபர் உட்பட 40 நாடுகளைச் சேர்ந்த 1500 பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|