|
| ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்கு |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009 ( 10:21 IST ) | |
பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் அதன் செயலாளர் ராஜசேகர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டின் போது நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் பின்பற்றப்படுவதில்லை.
கடந்த ஆண்டு மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டில் உச்ச நீதிமன்ற அறிவுரைகள் பின்பற்றப்படவில்லை. விலங்குகள் நல வாரிய நிர்வாகிகள் முன்னிலையில் போட்டி நடைபெறுவதில்லை.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு பயன்படுத்தும் காளை மாடுகளுக்கு போதைப் பொருள் வலுக்கட்டாயமாக ஊட்டப்படுகிறது. மாடுகளின் கண்களில் மிளகாய் பொடி தூவப்படுகிறது. இது மனிதத் தன்மையற்ற செயல். எனவே ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கை தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. ஓரிரு நாட்களின் இதன் மீதான விசாரணை நடக்கும் என்று தெரிகிறது.
இதேபோல் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி கடந்த ஆண்டும் வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|