|
| லாரி வேலை நிறுத்ததுக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009 ( 16:23 IST ) | |
லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
கடந்த 3 நாட்களாக லாரி உரிமையாளர்கள் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.இதனால் தென் மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், லாரி உரிமையாளர்களின் தற்போதைய வேலை நிறுத்தத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி இன்று வெளியிட்ட அறிக்கையில், லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று டீசல் விலையை மத்திய அரசு குறைக்க முன்வர வேண்டும் என்றும், அவர்களுக்கு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போதைய வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும் என்றும் அந்த கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|