|
| ராஜ் தாக்கரேவுக்கு எதிரான கைது உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009 ( 15:03 IST ) | |
மகாராஷ்ட்ரா நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு எதிராக ஜார்க்கண்ட் நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்ட்ராவிலுள்ள வட இந்தியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் ஜார்க்கண்ட் நீதிமன்றம், ராஜ் தாக்கரேவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவி பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், இதனை எதிர்த்தும், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தமக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் மும்பை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும் ராஜ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு, ஜார்க்கண்ட் நீதிமன்றத்தின் கைது உத்தரவுக்கு தடை விதித்தது.
அத்துடன் இந்த வழக்கு தொடர்பாக ராஜ் தாக்கரே ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்தும் விலக்கு அளித்தது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|