|
| 3-வது நாளாக தொடரும் லாரி ஸ்டிரைக் |
| புதுடெல்லி (ஏஜென்சி), 7 ஜனவரி 2009 ( 11:06 IST ) | |
மத்திய அரசு எச்சரிக்கை விடுத்த நிலையிலும் லாரிகள் வேலை நிறுத்தம் 3-வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 10 குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினத்திலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் லாரிகளின் பெர்மிட் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு நேற்று எச்சரித்திருந்தது. சேவை வரியில் சில விலக்குகளை அளிக்கவும் அது ஒப்புக் கொண்டது.
எனினும் லாரி உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளனர். இதனால் லாரிகள் வேலைநிறுத்தம் 3-வது நாளாக இன்றும் தொடர்ந்தது.
தமிழகத்தில் சுமார் நான்கரை லட்சம் லாரிகள் உட்பட, நாடு முழுவதும் 50 லட்சம் லாரிகள் ஓடாததால் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் மட்டும் 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வட மாநிலங்களை விட தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வேலை நிறுத்தம் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காய்கறி, பழங்கள், மளிகை சரக்குகள் வருவது தடைபட்டுள்ளதால் அவற்றின் விலைகள் கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|