யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
விண்வெளி வர்த்தகம் : 4 செயற்கைக்கோள்களை ஏவுகிறது இஸ்ரோ
பெங்களூரு (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009   ( 19:29 IST )
இந்திய விண்வெளி ஆ‌ய்வு மைய‌மான 'இஸ்ரோ' இந்த ஆண்டு 4 அய‌ல்நாட்டு செயற்கைக்கோள்களை ஏவ உள்ளது.

இதுகுறித்து பெங்களூரு‌வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்த இஸ்ரோவின் வர்த்தகப்பிரிவு நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.ஆர். ஸ்ரீதரரெட்டி, மேலும் கூறியதாவது:

சிங்கப்பூர், நெதர்லா‌ந்து, இத்தாலி, அல்ஜீரியா ஆகிய நா‌ன்கு நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான ஒப்பந்தம் நமக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டில் நாம் விண்வெளி வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பெற முடியும்.

சர்வதேச அளவில் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மற்ற நாடுகளைவிட இந்தியாவில்தான் குறைந்த கட்டணம் வசூ‌லி‌க்க‌ப்படு‌கிறது. செயற்கைக்கோள் எடையில் கிலோவுக்கு 20 ஆயிரம் யூரோதான் நா‌ம் கட்டணமாக நிர்ணயித்து உள்ளோம்.இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த கட்டணமாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஸ்டிரைக் : 60 லட்சம் லாரிகள் ஓடவில்லை
ஜம்மு - காஷ்மீர் : என்கவுண்டர் 6 ஆவது நாளாக நீடிப்பு
அஜ்மலுக்கு ஜன.19 வரை போலீஸ் காவல்
பயங்கரவாதமே பாக்.கின் கொள்கை : மன்மோகன் கடும் தாக்கு
ஸ்டிரைக் தொடர்ந்தால் லாரி பெர்மிட் ரத்து: அரசு
டெல்லியில் இன்று முதல்வர்கள் மாநாடு
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...