|
| ஸ்டிரைக் : 60 லட்சம் லாரிகள் ஓடவில்லை |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009 ( 18:50 IST ) | |
டீஸல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக காய்கறிகள்,பழங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்றி செல்வது பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு உணவு பொருட்களின் விலை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
நாசிக்கிலிருந்துதான் பெரும்பாலான மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்பப்பட்டு வருகிறது.ஆனால் லாரி ஸ்டிரைக் காரணமாக அவை அனுப்பப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளதால் வெங்காயத்தின் விலை மட்டும் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
கொல்கத்தாவில் 90 சதவீத லாரிகள் ஓடவில்லை என அகில இந்திய மோட்டார்ஸ் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் ஒருங்கிணைப்பு கமிட்டியின் கிழக்கு மண்டலத்திற்கான தலைவர் கே.கே.பன்சால் தெரிவித்தார்.இதனால் கொல்கத்தா துறைமுகத்திலிருந்து சரக்குகள் எடுத்துச் செல்லப்படுவது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|