யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜம்மு - காஷ்மீர் : என்கவுண்டர் 6 ஆவது நாளாக நீடிப்பு
ஜம்மு (ஏஜென்சி), 6 ஜனவரி 2009   ( 18:06 IST )
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையேயான துப்பாக்கிச்சண்டை இன்றும் ஆறாவது நாளாக நீடிக்கிறது.

பூஞ்ச் மாவட்டத்திலுள்ள பாத்தி தார் வனப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை பிடிப்பதற்காக, அங்கு புகுந்த பாதுகாப்பு படையினருடன் தீவிரவாதிகள் கடந்த ஐந்து நாட்களாக கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட் வருகின்றனர்.

இதில் இருதரப்பிலும் பலர் உயிரிழந்த நிலையில், இன்று காலையும் ஆறாவது நாளாக துப்பாக்கிச் சண்டை நீடித்தது.

தீவிரவாதிகள் குகைப்போன்ற பகுதிகளில் பாதுகாப்பாக மறைந்திருப்பதாலும், அடர்த்தியான பனி மூட்டம் காணப்படுவதாலும் நிலைமையை கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்றைய மோதலில் இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் ஏதுமில்லை.அதே சமயம் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ஆயுதங்கள் உள்ளிட்டவை சப்ளை செய்யப்படுவது முற்றிலும் அடைப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஸ்டிரைக் : 60 லட்சம் லாரிகள் ஓடவில்லை
அஜ்மலுக்கு ஜன.19 வரை போலீஸ் காவல்
பயங்கரவாதமே பாக்.கின் கொள்கை : மன்மோகன் கடும் தாக்கு
ஸ்டிரைக் தொடர்ந்தால் லாரி பெர்மிட் ரத்து: அரசு
டெல்லியில் இன்று முதல்வர்கள் மாநாடு
முதல்வராக பதவியேற்றார் உமர் அப்துல்லா
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...