யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அஜ்மலுக்கு ஜன.19 வரை போலீஸ் காவல்
மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009   ( 17:14 IST )
மும்பை தாக்குதலில் ஈடுபட்டு கைதான பயங்கரவாதி அஜ்மலை இம்மாதம் 19 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்படுள்ளது.

கடந்த நவம்பர் 26 ஆம் தேதியன்று மும்பை காமா மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அஜ்மல் மீது ஆஸாத் மைதான் காவல் நிலையத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்படிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று நடந்தது.அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மலை,இம்மாதம் 19 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதே சமயம் பாதுகாப்பு கருதி அஜ்மல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் வீடியோ கான்பரன்சிங் மூலமாகவே விசாரணை நடைபெற்றது.

அஜ்மலிடம் தாக்குதல் தொடர்பாக இன்னும் விசாரிக்க வேண்டியிருப்பதால் அவனை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட வேண்டும் என தங்கள் தரப்பில் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் இ.பி.தமால் தெரிவித்தார்.

அஜ்மல் மீது ஏற்கனவே தொடரப்பட்டுள்ள வேறு மூன்று வழக்குகளுக்காக அவன் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பயங்கரவாதமே பாக்.கின் கொள்கை : மன்மோகன் கடும் தாக்கு
ஸ்டிரைக் தொடர்ந்தால் லாரி பெர்மிட் ரத்து: அரசு
டெல்லியில் இன்று முதல்வர்கள் மாநாடு
முதல்வராக பதவியேற்றார் உமர் அப்துல்லா
காஷ்மீரில் நிலநடுக்கம்: மக்கள் பீதி
மகா. முதல்வருடன் நாராயண் ராணே சந்திப்பு
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...