யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பயங்கரவாதமே பாக்.கின் கொள்கை : மன்மோகன் கடும் தாக்கு
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009   ( 14:29 IST )
பாகிஸ்தான் அரசு அமைப்புகள் சிலவற்றின் உதவியுடன் மும்பைத் தாக்குதலை லஷ்கர் -இ - தொய்பா பயங்கரவாதிகள் நடத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், பயங்கரவாதமே அந்நாட்டின் கொள்கையாக உள்ளது என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய்வதற்காக அனைத்து மாநில முதல்வர்கள், உள்துறை அமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:

மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசின் ஆதரவு பெற்ற சில அமைப்புகள், ராணுவத் தொழில் நுட்பம், தகவல்களை அளித்து உதவி புரிந்துள்ளன.

தாக்குதல் நடந்த விதமும், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும், அதி நவீன கருவிகளும், பாகிஸ்தான் அரசு ஆதரவு பெற்ற அமைப்புகளின் உதவியுடன் தான் நடந்துள்ளது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

மும்பைத் தாக்குதலில் லஷ்கர்-இ- தொய்பா அமைப்புக்கு தொடர்பு இருப்பது வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் சேகரித்த ஆதாரங்கள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

இந்தியாவில் நடந்த பயங்கரவாதச் செயல்களில் பெரும்பாலானவை வெளிநாட்டு சக்திகளின், குறிப்பாக பாகிஸ்தானின் ஆதரவில் நடந்தவை.

பிரச்சனையை நேரடியாக அணுகுவதை தவிர்த்து, பாகிஸ்தான் தன்னிச்சையாகப் போர் பீதியைத் தூண்டுகிறது. ஆனாலும் இந்தியா ஒற்றுமையுடனும், உறுதியுடனும் எதையும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளது.

தற்போதைய சூழ்நிலை சவாலாக உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை எவரும் குலைத்துவிட முடியாது.

மும்பை தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைப்பாடும் ஒரு காரணம் என்பது ஒப்புக் கொள்ளக் கூடியது தான். இதனால் நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டியுள்ளது. நமது பாதுகாப்பு அமைப்பை ஆராய்ந்து அவற்றை மேம்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது .

இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, அனைத்து மாநில முதல்வர்கள், உள்துறை அமைச்சர்கள் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பதிலாக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். புதுவை மாநிலம் சார்பில் முதல்வர் வைத்தியலிங்கம் பங்கேற்றார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஸ்டிரைக் தொடர்ந்தால் லாரி பெர்மிட் ரத்து: அரசு
டெல்லியில் இன்று முதல்வர்கள் மாநாடு
முதல்வராக பதவியேற்றார் உமர் அப்துல்லா
காஷ்மீரில் நிலநடுக்கம்: மக்கள் பீதி
மகா. முதல்வருடன் நாராயண் ராணே சந்திப்பு
மும்பை தாக்குதல் : ஆதாரங்களை பாக்.கிடம் அளித்தது இந்தியா
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...