யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
டெல்லியில் இன்று முதல்வர்கள் மாநாடு
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009   ( 09:38 IST )
டெல்லியில் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தின் சார்பில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொள்கிறார்.

மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக அனைத்து மாநில முதல்வர்கள், உள்துறை அமைச்சர்களின் மாநாட்டை மத்திய அரசு இன்று கூட்டியுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தீவிரவாதத் தாக்குதல்களை முறியடிப்பது, உள்நாட்டு பாதுகாப்பு, கடலோரப் பாதுகாப்பு, உளவுத்துறையை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது.

உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி மற்றும் உள்துறை, பாதுகாப்புத்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள், உளவுத்துறை உயரதிகாரிகள் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டிருப்பதால் தமிழக முதல்வர் கருணாநிதி இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொள்கிறார். புதுவை மாநிலம் சார்பில் முதல்வர் வைத்தியலிங்கம் இம்மாநாட்டில் பங்கேற்கிறார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
முதல்வராக பதவியேற்றார் உமர் அப்துல்லா
காஷ்மீரில் நிலநடுக்கம்: மக்கள் பீதி
மகா. முதல்வருடன் நாராயண் ராணே சந்திப்பு
மும்பை தாக்குதல் : ஆதாரங்களை பாக்.கிடம் அளித்தது இந்தியா
காஷ்மீர்: உமர் அப்துல்லா இன்று பதவியேற்பு
இன்று பாஜக முதல்வர்கள் கூட்டம்
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...