யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
முதல்வராக பதவியேற்றார் உமர் அப்துல்லா
ஜம்மு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009   ( 15:23 IST )
ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக உமர் அப்துல்லாவும், துணை முதல்வராக தாராசந்தும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

ஜம்மு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மைதானத்தில் இன்று பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஆளுநர் என்.என். வோரா, முதல்வர் உமர் அப்துல்லாவுக்கும் (38), துணை முதல்வர் தாராசந்துக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலா 5 பேர் என, மொத்த 10 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பதவியேற்றுக் கொண்டது.

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.பதவியேற்பு விழா நடைபெறும் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அண்மையில் ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதையடுத்து, 27 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்க முடிவு செய்தது நினைவுகூறத் தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காஷ்மீரில் நிலநடுக்கம்: மக்கள் பீதி
மகா. முதல்வருடன் நாராயண் ராணே சந்திப்பு
மும்பை தாக்குதல் : ஆதாரங்களை பாக்.கிடம் அளித்தது இந்தியா
காஷ்மீர்: உமர் அப்துல்லா இன்று பதவியேற்பு
இன்று பாஜக முதல்வர்கள் கூட்டம்
டெல்லியில் நாளை முதல்வர்கள் மாநாடு
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...