யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மகா. முதல்வருடன் நாராயண் ராணே சந்திப்பு
மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009   ( 12:53 IST )
மகாராஷ்ட்ரா முதலமைச்சர் அசோக் சவாணுன், காங்கிரஸ் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட நாராயண் ராணே இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

மும்பை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து மகாராஷ்ட்ரா முதலமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, வருவாய் துறை அமைச்சராக இருந்த ராணே, தனக்கு அந்த பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார்.ஆனால் காங்கிரஸ் மேலிடம் அசோக் சவாணை முதலமைச்சர் பதவியில் நியமித்தார்.

இதனால் அதிருப்தியடைந்த ராணே, கட்சி மேலிடத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தார்.இதனையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனால் ராணே தனிக்கட்சி தொடங்கக்கூடும் என்ற பேச்சு எழுந்தது.ராணேவும் இதனை உறுதிபடுத்துவதைப் போன்ற கருத்தைத்தான் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், திடீரென இன்று காலை முதலமைச்சர் அசோக் சவாணை, தென்மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் நாராயண் ராணே நேரில் சென்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் என்னப் பேசிக்கொண்டார்கள் என்பது குறித்த தகவல் தெரியவரவில்லை என்ற போதிலும், தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ராணே நாளை அறிவிப்பு வெளியிட உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மும்பை தாக்குதல் : ஆதாரங்களை பாக்.கிடம் அளித்தது இந்தியா
காஷ்மீர்: உமர் அப்துல்லா இன்று பதவியேற்பு
இன்று பாஜக முதல்வர்கள் கூட்டம்
டெல்லியில் நாளை முதல்வர்கள் மாநாடு
மருத்துவமனையில் கலாம் அனுமதி
லாரி வேலைநிறுத்தம் தொடங்கியது
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...