யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மும்பை தாக்குதல் : ஆதாரங்களை பாக்.கிடம் அளித்தது இந்தியா
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009   ( 12:15 IST )
மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா அளித்தது.

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் சில பயங்கரவாத குழுக்களின் தலைவர்கள்தான் காரணம் என்பதும், தாக்குதலில் ஈடுபட்டு கைதான பயங்கரவாதி அஜ்மல் கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவன்தான் என்பதும் விசாரணையில் உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அதனை ஏற்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

அத்துடன் இது தொடர்பான ஆதாரங்களை தங்களிடம் தருமாறும் அந்நாடு கூறி வந்தது.

இந்நிலையில், இன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செயலர் சிவசங்கர மேனன், டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஷாகித் மாலிக்கை நேரில் வரவழைத்து , மும்பை தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை அளித்தார்.

இத்தகவலை டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள சக்திகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் அளிக்கப்பட்டிருப்பதாகவும், மேற்கொண்டு இது தொடர்பாக பாகிஸ்தான் விசாரணை மேற்கொள்ளும் என இந்தியா எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

மேலும் இதே ஆதாரங்கள் அடுத்த 24 மணி நேரத்தில் இதர வெளிநாட்டு தூதரக அதிகாரிகளிடமும் அளிக்கப்படும் என்று பிரணாப் தெரிவித்தார்.



(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காஷ்மீர்: உமர் அப்துல்லா இன்று பதவியேற்பு
இன்று பாஜக முதல்வர்கள் கூட்டம்
டெல்லியில் நாளை முதல்வர்கள் மாநாடு
மருத்துவமனையில் கலாம் அனுமதி
லாரி வேலைநிறுத்தம் தொடங்கியது
அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு: சரக்கு ரயில் சேதம்
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...