யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
காஷ்மீர்: உமர் அப்துல்லா இன்று பதவியேற்பு
ஸ்ரீநகர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009   ( 11:26 IST )
ஜம்மு- காஷ்மீர் மாநில முதல்வராக, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா இன்று பதவியேற்கிறார்.

ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

இதையடுத்து, 27 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ள தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்க முடிவு செய்தது. அதற்கான உரிமையையும் ஆளுநரிடம் கோரியது.

இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் உமர் அப்துல்லா தலைமையிலான கூட்டணி அரசு இன்று பதவி ஏற்கிறது. ஜம்மு பல்கலைக்கழக வளாக மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் விழாவில், உமர் அப்துல்லா மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் என்.என். வோரா, பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதி மொழியையும் செய்து வைக்கிறார்.

கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என்று தெரிகிறது. உமருடன் 6 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவி ஏற்கும் என்று கூறப்படுகிறது.

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் முதல்வரும் உமர் அப்துல்லாவின் தந்தையுமான பரூக் அப்துல்லா உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

38 வயதாகும் உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இளம் வயது முதல்வர் என்ற சிறப்பைப் பெறுகிறார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இன்று பாஜக முதல்வர்கள் கூட்டம்
டெல்லியில் நாளை முதல்வர்கள் மாநாடு
மருத்துவமனையில் கலாம் அனுமதி
லாரி வேலைநிறுத்தம் தொடங்கியது
அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு: சரக்கு ரயில் சேதம்
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...