|
| டெல்லியில் நாளை முதல்வர்கள் மாநாடு |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009 ( 09:28 IST ) | |
பயங்கரவாதம், உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் நாளை அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் தீவிரவாதத் தாக்குதல்களை முறியடிப்பது, உள்நாட்டு பாதுகாப்பு, கடலோரப் பாதுகாப்பு, உளவுத்துறையை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது.
இதுதவிர காவல்துறையில் காலியிடங்களை நிரப்புவது, அனைத்து மாநில காவல் நிலையங்களையும் கணினி மூலம் இணைப்பது போன்ற அம்சங்களும் முதல்வர்களின் மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதால், நாளைய மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. அவருக்கு பதில் அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்வார் என்றும் கூறப்படுகிறது.
உள்துறை அமைச்சராக ப. சிதம்பரம் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதல் முறையாக முதல்வர்கள் மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|