|
| லாரி வேலைநிறுத்தம் தொடங்கியது |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009 ( 09:04 IST ) | |
நாடு தழுவிய அளவில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நேற்று நள்ளிரவு தொடங்கியது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 10 குறைக்க வேண்டும், சேவை வரி- சுங்க வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், டயர் விலையை 35 சதவீதம் குறைக்க வேண்டும், தேசிய பர்மிட் கட்டணத்தை ரூ. 35 ஆயிரத்தில் இருந்து ரூ. 1,500 ஆகக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் செய்வது என்று அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்திருந்தது.
இதற்கிடையே லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
கடைசி கட்ட முயற்சியாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சக செயலாளர் பிரம்ம தத், லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று டெல்லியில் பேச்சு வார்த்தை நடத்தினார். இதுவும் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து ஏற்கனவே அறிவித்தபடி நேற்று நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் தங்களது வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் இன்று காலை முதல் சுமார் 50 லட்சம் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த வேலைநிறுத்தத்தால் மறைமுகமாக 30 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு நாள்தோறும் ரூ. 1,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிகிறது.
பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|