யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
தேர்தல் தோல்வி : 2 ஆந்திர அமைச்சர்கள் ராஜினாமா
ஐதராபாத் (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 ஜனவரி 2009   ( 17:09 IST )
ஆந்திராவில் உள்ளாட்சி தொகுதிகளுக்கு நடைபெற்ற டைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளர்.

சந்தைப்படுத்தல் துறை இணையமைச்சர் எம். மாரப்பா மற்றும் நீர்ப்பாசனத்துறை இணையமைச்சர் எம். வெங்கடேஸ்வர ராவ் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களை முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டிக்கு அனுப்பிவைத்தனர்.

அவர்களது ராஜினாமாக்களை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் அவற்றை மாநில கவர்னர் என்.டி.திவாரிக்கு அனுப்பி வைத்தார்.

முன்னதாக ஆந்திர மாநிலத்தின் ஏழு ஜில்லா பரிஷத்துகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

இதில் மேற்கூறிய இரு அமைச்சர்களின் சொந்த சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஜில்லா பரிஷத்திலும் காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டது.இதற்கு தார்மீக பொறுப்பேற்றே அமைச்சர்கள் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் ஜில்லா பரிஷத்களுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஊடுருவலை தடுக்க கூடுதல் படை: பிஎஸ்எப் கோரிக்கை
மும்பை தாக்குதல் : பாக்.கிற்கு மன்மோகன் மீண்டும் கண்டிப்பு
காஷ்மீர் : துப்பாக்கிச் சண்டையில் போலீஸ் அதிகாரி பலி
மும்பை தாக்குதல்: ஆதாரங்களை தொகுக்கிறது இந்தியா!
தேர்தல் ஆணையத்தில் அதிமுக, கம்யூ. புகார்
மும்பை தாக்குதல் ஆதாரம்: பாக். மறுக்க முடியாது!
செய்திகள்
தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...