யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
காஷ்மீர் : துப்பாக்கிச் சண்டையில் போலீஸ் அதிகாரி பலி
பூஞ்ச் (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 ஜனவரி 2009   ( 13:45 IST )
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் போலீஸ் உயரதிகாரி ஒருவர் பலியானார்.

பத்திதர் என்ற இடத்திலுள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதியை கடந்த வியாழன்று மாலை முற்றுகையிட்டனர்.

அப்போது நடந்த சண்டையில் தீவிரவாதிகள் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.பாதுகாப்பு படை தரப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.இந்த சண்டையை தொடர்ந்து எஞ்சிய தீவிரவாதிகள் தப்பி ஓடி மெந்தர் என்ற இடத்திற்கு தப்பி ஓடினர்.

அங்கும் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை விரட்டிச் சென்ற நிலையில், நேற்று நள்ளிரவு முதல் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் காவல் துறையை சேர்ந்த சிறப்பு பிரிவு அதிகாரி நரேஷ் குமார் என்பவர் தீவிரவாதிகளின் குண்டுக்கு பலியானதாக ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதே சமயம் அங்கு பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை பிடிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மும்பை தாக்குதல்: ஆதாரங்களை தொகுக்கிறது இந்தியா!
தேர்தல் ஆணையத்தில் அதிமுக, கம்யூ. புகார்
மும்பை தாக்குதல் ஆதாரம்: பாக். மறுக்க முடியாது!
தெ.தேசம் எம்எல்ஏ-க்கள் சிரஞ்சீவி கட்சிக்கு தாவல்
தோனி குடும்பத்துக்கு மிரட்டல்: 3 பேர் கைது
ஜன.5ல் காஷ்மீர் முதல்வராக உமர் பதவியேற்பு!
செய்திகள்
தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...