|
| மும்பை தாக்குதல்: ஆதாரங்களை தொகுக்கிறது இந்தியா! |
| புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 ஜனவரி 2009 ( 13:07 IST ) | |
மும்பை தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட மத்திய அரசு தயாராகி வருகிறது.
'மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தங்களது நாட்டை சேர்ந்தவர்களே அல்ல' என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில், மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்களை மத்திய அரசு தொகுத்து வருகிறது. அதன்படி, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தவர்கள், பயிற்சி முகாம்கள் அமைந்துள்ள இடங்கள், பயங்கரவாதிகள் தீட்டிய சதித்திட்டம் ஆகியவை குறித்த ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இதில் முக்கிய ஆதாரமாக, மும்பை தாக்குதலின் போது பிடிப்பட்ட பயங்கரவாதி அஜ்மலின் வாக்குமூலம் இருக்கும். இதன் அடிப்படையில் திரட்டப்பட்டுள்ள பல்வேறு ஆதாரங்களும் முக்கிய இடம் பிடிக்கின்றன.
பயங்கரவாதிகள் பயன்படுத்திய படகிலிருந்து கிடைத்த தடயங்கள், பயங்கரவாதிகளுக்கும், அவர்களை ஏவியவர்களுக்கும் இடையேயான சாட்டிலைட் போன் உரையாடல் ஆகியவையும் மிக முக்கிய ஆதாரங்களாக கருதப்படுகிறது.
இந்த ஆதாரங்களை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா உள்பட உலக நாடுகளிடம் இந்தியா கொடுக்கவுள்ளது. அதோடு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ள நாடுகளிடமும் இந்த ஆதாரங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|