யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
தேர்தல் ஆணையத்தில் அதிமுக, கம்யூ. புகார்
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2009   ( 18:09 IST )
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலுக்காக, திமுக அரசு தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாக, அதிமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன.

அதிமுகவின் டாக்டர் மைத்ரேயன் தலைமையிலான குழு, தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமியை இன்று டெல்லியில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தது.

அதில், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக திமுக அரசு தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

காவல்துறையினரை பயன்படுத்தி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது ஆளும் திமுக பொய் வழக்குகளை போடுவதாகவும், எதிர்க்கட்சியினர் தாக்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இவ்விஷயத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற ஆவன செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இக்குழுவில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஹூருல் ஹூடா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மும்பை தாக்குதல் ஆதாரம்: பாக். மறுக்க முடியாது!
தெ.தேசம் எம்எல்ஏ-க்கள் சிரஞ்சீவி கட்சிக்கு தாவல்
தோனி குடும்பத்துக்கு மிரட்டல்: 3 பேர் கைது
ஜன.5ல் காஷ்மீர் முதல்வராக உமர் பதவியேற்பு!
ஜம்மு காஷ்மீரில் மோதல்: 2 ராணுவத்தினர் பலி
அஸ்ஸாமில் தொடர் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி
செய்திகள்
தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...