|
| மும்பை தாக்குதல் ஆதாரம்: பாக். மறுக்க முடியாது! |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2009 ( 16:24 IST ) | |
'மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் லஷ்கர் -இ- தொய்பா அமைப்புக்கு தொடர்பு இருப்பதற்கா௦ன ஆதாரத்தை பாகிஸ்தானால் மறுக்க முடியாது' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு பின்னர் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் லஷ்கர் -இ- தொய்பா அமைப்புக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரத்தை இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் அளித்துள்ளன. இந்த ஆதாரங்கள் தவறானவை என்று பாகிஸ்தானால் மறுக்க முடியாது.
பயங்கரவாதத்தை அடியோடு அழிக்கும் வரை பயங்கரவாதத்திற்கு எதிரான நமது போராட்டம் தொடரும். பயங்கரவாதத்தை அழிப்பது என்பது ஒரே நாளில் நடக்கக்கூடிய விஷயம் அல்ல: என்றாலும் வரும் ஆண்டுகளில் நிச்சயம் பயங்கரவாதத்தை நாம் அடியோடு ஒழிப்போம். இது நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.
மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு மூளையாக செயல்பட்டவர்களுக்கும் இடையே 'இணைய வழித் தொலைபேசி' (Voice over Internet Protocol (VoIP)) மூலம் நடந்த தகவல் பறிமாற்றம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|