யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
தோனி குடும்பத்துக்கு மிரட்டல்: 3 பேர் கைது
ராஞ்சி (ஏஜென்சி), 2 ஜனவரி 2009   ( 13:46 IST )
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனியின் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 3 பேரை ஜார்க்கண்ட் மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மகேந்திரசிங் தோனியின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமையன்று தோனியின் குடும்பத்தினருக்கு வந்த கடிதத்தில், 'ரூ. 50 லட்சம் தரவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வரும் தாவுத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான, பிரபல தாதா தஸ்லீம் பெயரில் இக்கடிதம் அனுப்பட்டிருந்தது.

கடந்த புதன் கிழமையன்று ஜார்க்கண்ட் காவல்துறையினரைச் சந்தித்து மிரட்டல் கடிதங்களை வழங்கிய தோனி, இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினரைக் கேட்டிருந்தார்.

இந்நிலையில், மிரட்டல் கடிதம் அனுப்பிய விவகாரம் தொடர்பாக 3 பேரை ஜார்க்கண்ட் மாநில காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர். கைதாகியுள்ள ரஞ்சித், சாதிக் மற்றும் பர்வேஸ் ஆகிய மூவரிடமும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மிரட்டல் கடிதம் உண்மையிலேயே தஸ்லீம் எழுதினாரா? அல்லது வேறு எவராவது பணம் பறிக்கும் நோக்கில் இதைச் செய்துள்ளனரா? என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜன.5ல் காஷ்மீர் முதல்வராக உமர் பதவியேற்பு!
ஜம்மு காஷ்மீரில் மோதல்: 2 ராணுவத்தினர் பலி
அஸ்ஸாமில் தொடர் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி
பண வீக்கம் 6.38 சதவீதமாக சரிவு
மன்மோகன் சிங்குடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
டெல்லியில் விமானச் சேவை இயல்புக்கு திரும்பியது
செய்திகள்
தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...