யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
காஷ்மீர் முதல்வராகிறார் உமர்: பரூக் பரிந்துரை
ஸ்ரீநகர் (ஏஜென்சி), 29 டிசம்பர் 2008   ( 15:40 IST )
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்வராக தனது மகன் உமர் அப்துல்லாவை தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பரிந்துரை செய்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில், அதிகபட்சமாக 28 இடங்களை கைப்பற்றிய தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, இன்று டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மாநிலத்தின் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பொறுப்பேற்கவுள்ளதாக நேற்று மாலை செய்தி வெளியானது. பின்னர், தானே முதல்வர் பொறுப்பை ஏற்கவுள்ளதாக பரூக் அப்துல்லா நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், தனது மகன் உமர் அப்துல்லா தான் முதல்வர் பொறுப்பை ஏற்பார் என இன்று தெரிவித்த பரூக் அப்துல்லா, இதற்காக தனது கட்சியின் மூத்தத் தலைவர்களிடம் பரிந்துரை செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தேசிய மாநாட்டு கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து காங்கிரஸ் இன்று அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியிடும் என்று தெரிகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மகர விளக்கு: சபரிமலையில் நாளை திறப்பு
மூடுபனி: டெல்லியில் விமான சேவை பாதிப்பு
மாணவர் சுட்டுக்கொலை: விசாரணை நடத்த ராணுவம் முடிவு
தேசிய மாநாடு-காங்.ஆட்சி: முதல்வராகிறார் பரூக்!
ஜம்மு-காஷ்மீரில் காங்.-தேசிய மாநாடு கூட்டணி ஆட்சி?
ஏப்ரல்-மே மாதத்தில் மக்களவைத் தேர்தல்: கோபாலசாமி
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்வராக தனது மகன் உமர் அப்துல்லாவை தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பரிந்துரை செய்துள்ளார்....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - இன்றைய நம் வாழ்க்கையில் ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் முறையாகப் பயன்படுத்தாத ஏசி-க்களால் உடல்...
மேலும் படிக்க|மேலும்...