யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பாகிஸ்தானுடனான உறவுகள் ரத்து: இந்தியா
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 23 டிசம்பர் 2008   ( 12:04 IST )
பாகிஸ்தானுடன் எந்த நேரத்திலும் போர் ஏற்படலாம் என்று கருதப்படும் நிலையில், அந்நாட்டுடனான அனைத்து உறவுகளையும் நிறுத்திவைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் புதுடெல்லியில் நேற்றிரவு கூறியதாவது:

மும்பை தாக்குதலுக்குப் பின் இந்தியாவுக்கு இரண்டு குறிக்கோள்கள் மட்டுமே உள்ளன. முதலில் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும். அடுத்தது, மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா நிறுத்தி வைக்கிறது.

அந்நாட்டுடன் இந்தியா மேற்கொண்டு வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுகின்றன. மும்பைத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் கேட்கும் ஆதரங்களை, வழக்கு விசாரணை முடிந்த பிறகே பகிர்ந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

பாகிஸ்தான் எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அந்துலே விவகாரம்: பார்லி.யில் இரு அவைகளும் ஒத்திவைப்பு
பாக். மிரட்டலை எதிர் கொள்ள தயாராகவே உள்ளோம்: பிரணாப்
அந்துலே விவகாரம்: ராஜ்யசபை இருமுறை ஒத்திவைப்பு
மீண்டும் தாக்க பயங்கரவாதிகள் சதி: உளவுத்துறை
இந்திய தூதர்கள் ஆலோசனைக் கூட்டம்: இன்று துவக்கம்
இந்தியா - பாக். எல்லையில் சுரங்கம் அமைத்து கடத்தல்
செய்திகள்
தேசியம் - இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்துவதற்காக, பாரதிய ஜனதா தலைவர் அத்வானியை வரும் 21ம் தேதி இலங்கை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பூ - விமர்சனம்
பூ -படத்தின் பெயரைப் போலவே படம் நெடுக மணம் வீசச் செய்துள்ளார் இயக்குனர் சசி. அதற்காக அவருக்கு முதலில் நமது பாராட்டுக்கள்...
தெனாவட்டு
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - இன்றைய நம் வாழ்க்கையில் ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் முறையாகப் பயன்படுத்தாத ஏசி-க்களால் உடல் ஆரோக்கியம் பாதிப்படும்...
மேலும் படிக்க|மேலும்...