|
| அடுத்த வாரம் கொழும்பு செல்கிறார் பிரணாப் |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2008 ( 09:16 IST ) | |
இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது குறித்து அந்நாட்டு அரசுடன் விவாதிப்பதற்காக, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அடுத்த வாரம் கொழும்பு செல்கிறார்.
மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். பாலு, பிரணாப் முகர்ஜி இலங்கை செல்லவிருக்கும் தகவலை வெளியிட்டார்.
எனினும், பிரணாப்பின் இலங்கைப் பயணம் குறித்த சரியான தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இன்னும் 5 அல்லது 6 நாட்களில் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு செல்வார் எனத் தெரிகிறது.
இலங்கை பிரச்னை தொடர்பாக முதல்வர் கருணாநிதி தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவினர் கடந்த 4 ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர்.
அப்போது முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளை ஏற்று, பிரணாப் முகர்ஜியை கொழும்பு அனுப்பி வைக்க பிரதமர் மன்மோகன்சிங் சம்மதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - வரும் ஏப்ரல்- மே மாதங்களில் மக்களைத் தேர்தல் நடைபெறலாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் என். கோபாலஸ்வாமி தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | பூ - விமர்சனம் | | பூ -படத்தின் பெயரைப் போலவே படம் நெடுக மணம் வீசச் செய்துள்ளார் இயக்குனர் சசி. அதற்காக அவருக்கு முதலில் நமது பாராட்டுக்கள்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - நம்மில் பெரும்பாலானோருக்கு தேநீர் அருந்தாமல் இருக்க முடியாது. அந்த நேரங்களில் பச்சைத் தேநீரைக் குடித்தால் இதய நோய் உங்களை அண்டாது... |
| |
|
|
|
|
|
|
|