|
| பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.2 விலை குறைப்பு |
| புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 டிசம்பர் 2008 ( 09:07 IST ) | |
பெட்ரோல் விலை ரூ.5-ம், டீசல் விலை ரூ.2-ம் குறைக்கப்பட்டுள்ளது. இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்ததை அடுத்து பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி பெட்ரோல் விலை ரூ.5-ம், டீசல் விலை ரூ.2-ம் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. இந்த விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
விலைக் குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பெட்ரோலிய அமைச்சகம், இது ஒரு தற்காலிக நடவடிக்கைதான் என்றும், சர்வதேசச் சந்தை நிலவரத்தைப் பொறுத்து விலைகளை மேலும் குறைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் விளக்கியுள்ளது.
புதிய விலையின் படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.49.66-க்கு விற்கப்படும். (பழைய விலை ரூ. 55.07). இதேபோல் டீசல் லிட்டருக்கு ரூ. 34.98 ஆக விற்பனை செய்யப்படும் (பழைய விலை ரூ. 37.13).
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|