|
| இலங்கை பிரச்னை: பிரணாப் கொழும்பு செல்கிறார் |
| புதுடெல்லி (ஏஜென்சி), 4 டிசம்பர் 2008 ( 13:39 IST ) | |
இலங்கை பிரச்னை தொடர்பாக அந்நாட்டு அரசுடன் விவாதிப்பதற்காக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அங்கு அனுப்பி வைக்கப்படுவார் என தன்னிடம் பிரதமர் உறுதி அளித்திருப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி தலைமையிலான அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியது.
இந்த சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி தெரிவித்ததாவது:
இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்த எங்களின் கவலையை பிரதமரிடம் தெரிவித்தோம்.அங்கு உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படியும் அவரைக் கேட்டுக் கொண்டோம்.
போர் நிறுத்தம் மேற்கொள்ளவும், அமைதிப் பேச்சு நடத்துவதற்கு ஏதுவாகவும் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
எங்கள் கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் பரிவுடன் கேட்டறிந்தார். மேலும் இப்பிரச்னை தொடர்பாக விவாதிப்பதற்கு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பவும் அவர் ஒப்புக் கொண்டார்.
வெளியுறவு அமைச்சர் இலங்கை செல்லும் தேதியை அறிவிக்கும்படி பிரதமரிடம் கேட்கப்பட்டது. எவ்வளவு சீக்கிரம் அனுப்ப முடியுமோ அவ்வளவு விரைவில் பிரணாப் அங்கு செல்வார் என்று பிரதமர் என்னிடம் உறுதியளித்தார்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.
மழைச் சேதம், வெள்ள நிவாரணம் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் மன்மோகனிடம் கருணாநிதி விவாதித்தார். இது குறித்த முழு விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|