யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
டெல்லி கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008   ( 13:38 IST )
டெல்லி உயர்நீதிமன்றம் உட்பட சில நீதிமன்றங்களுக்கு இன்று விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பாதுகாப்பு கருதி நீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

டெல்லி திஸ் ஹஸாரி பகுதியில் உள்ள நீதிமன்றத்துக்கு இன்று காலை 9.10 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், வெடிகுண்டுகளுடன் 6 தீவிரவாதிகள் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்திருப்பதாகவும், பிற்பகல் 2 மணிக்குள் பெரும் நாசவேலைகளை நடத்த அவர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறிவிட்டு, அழைப்பைத் துண்டித்தார்.

இதையடுத்து டெல்லி நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினருக்கும், வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழுவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், டெல்லி உயர்நீதிமன்றம் உட்பட நீதிமன்றங்களின் அலுவல்கள் அனைத்தும் பிற்பகல் வரை நிறுத்தப்பட்டன.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களின் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தில் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பும், பீதியும் நிலவியது. இன்று நடைபெறவிருந்த பல்பேறு வழக்குகள் நாளைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
' வான் வழி தாக்குதல் மிரட்டல் உண்மைதான் '
ராஜஸ்தானில் வாக்குப்பதிவு தொடங்கியது
தேஷ்முக் ராஜினாமா ஏற்பு: இன்று புதிய முதல்வர் தேர்வு
கூடுதல் நிவாரண உதவி கோரப்படும்: கருணாநிதி
பிரதமரை சந்தித்தது தமிழக அனைத்துக்கட்சி குழு
இந்தியாவுக்கு ஒத்துழைக்க பாக்.கிற்கு ரைஸ் வலியுறுத்தல்
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...