யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
' வான் வழி தாக்குதல் மிரட்டல் உண்மைதான் '
புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008   ( 13:38 IST )
பயங்கரவாதிகள் வான் வழி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அரசுக்கு தகவல் வந்திருப்பதை விமானப்படை தலைவர் ஃபாலி ஹோமியும் உறுதிபடுத்தியுள்ளார்.

கடற்படை தினத்தையொட்டி டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமைந்திருக்கும் அமர் ஜவான் ஜோதியில் உயிர் நீத்த முன்னாள் வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ஃபாலி ஹோமி.

அப்போது பயங்கரவாதிகள், நியூயார்க்கில் ( 9 / 11 ) நடத்தியதுபோன்று வான் வழி தாக்குதல் நடத்தலாம் என அரசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வழக்கம்போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியுடன் முப்படை தளபதிகளும் நேற்று தீவிரமாக விவாதித்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 ஆம் தேதி நினைவு தினம் நெருங்குவதையொட்டி, இந்தியவுக்குள் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகள் வான் வழி தாக்குதல் நடத்தக்கூடும் என புலனாய்வு துறை விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லி,பெங்களூரு மற்றும் சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் அனைத்தும் முழு அளவில் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக மும்பையில் கடந்த வாரம் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற டெக்கான் முஜாகிதீன் என்ற பயங்கரவாத இயக்கம், டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதிக்குள் டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை விமான நிலையங்களை தாக்கப்போவதாக இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராஜஸ்தானில் வாக்குப்பதிவு தொடங்கியது
தேஷ்முக் ராஜினாமா ஏற்பு: இன்று புதிய முதல்வர் தேர்வு
கூடுதல் நிவாரண உதவி கோரப்படும்: கருணாநிதி
பிரதமரை சந்தித்தது தமிழக அனைத்துக்கட்சி குழு
இந்தியாவுக்கு ஒத்துழைக்க பாக்.கிற்கு ரைஸ் வலியுறுத்தல்
ஐதராபாத்தில் தேடுதல் வேட்டை : போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...