யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ராஜஸ்தானில் வாக்குப்பதிவு தொடங்கியது
ஜெய்ப்பூர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008   ( 10:52 IST )
ராஜஸ்தான் மாநிலத்தின் 13-வது சட்டப் பேரவையைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, தொடர்ச்சியாக மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. பனி மூட்டம் காரணமாக சில இடங்களில் காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.

எனினும், பல இடங்களில் ஆண்களும், பெண்களும் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்ததைக் காண முடிந்ததாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று தேர்தல் நடைபெறும் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கு 154 பெண்கள் உட்பட மொத்தம் 2,194 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 1.72 கோடி பெண்கள் உட்பட மொத்தம் 3.62 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 42,500 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக 193 தொகுதிகளிலும், காங்கிரஸ் 200 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா ஜல்ரபந்த் தொகுதியிலும், முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் வேட்பாளருமான அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மும்பை தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக, இன்றைய தேர்தலுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் காவல்துறையினரும், துணை ராணுவத்தினரு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, உள்துறை செயலாளர் எஸ்.என்.தான்வி தெரிவித்தார்.

பாதுகாப்பு கருதி, அண்டை மாநிலங்களாக ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகியவற்றின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தேஷ்முக் ராஜினாமா ஏற்பு: இன்று புதிய முதல்வர் தேர்வு
கூடுதல் நிவாரண உதவி கோரப்படும்: கருணாநிதி
பிரதமரை இன்று சந்திக்கிறார் கருணாநிதி
இந்தியாவுக்கு ஒத்துழைக்க பாக்.கிற்கு ரைஸ் வலியுறுத்தல்
ஐதராபாத்தில் தேடுதல் வேட்டை : போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு
பயங்கரவாதத்திற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் : சோனியா
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...