|
| தேஷ்முக் ராஜினாமா ஏற்பு: இன்று புதிய முதல்வர் தேர்வு |
| மும்பை (ஏஜென்சி), 4 டிசம்பர் 2008 ( 09:41 IST ) | |
காங்கிரஸ் தலைமையின் உத்தரவுக்கிணங்க மகராஷ்டிர முதல்வர் பதவியை விலாஸ்ராவ் தேஷ்முக் ராஜினாமா செய்தார்.புதிய முதல்வர் இன்று தேர்வு செய்யப்படுகிறார்.
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தடுக்கத் தவறியதற்கு பொறுப்பேற்று, மகாராஷ்டிர மாநில உள்துறை விவகாரங்களை கவனித்து வந்த துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் பதவி விலகினார்.
இதையடுத்து முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. காங்கிரஸ் தலைமையின் அழைப்புக்கிணங்க கடந்த செவ்வாய்க் கிழமை டெல்லி சென்ற தேஷ்முக், கட்சித் தலைவர் சோனியாவிடம் தனது ராஜினாமாக் கடிதத்தை அளித்தார்.
இந்நிலையில், தேஷ்முக்கின் ராஜினாமாக் கடிதத்தை காங்கிரஸ் தலைமை நேற்று ஏற்றுக் கொண்டது. இந்த தகவலை காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் மனீஷ் திவாரி டெல்லியில் அறிவித்தார்.
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனியும், தேஷ்முக் ராஜினாமா ஏற்கப்பட்டதை உறுதி செய்தார்.
இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினர்.
மகாராஷ்டிராவில் உள்ள கூட்டணி அரசில், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகிப்பதால் புதிய முதல்வர் தேர்வு குறித்து அவரிடம் விவாதிக்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வர் இன்று தேர்வு செய்யப்படுகிறார். இதற்காக, காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் மும்பையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில் இன்று கூடுகிறது. இதில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|