|
| கூடுதல் நிவாரண உதவி கோரப்படும்: கருணாநிதி |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008 ( 09:23 IST ) | |
தமிழகத்தில் மழை- வெள்ள நிவாரண உதவிகள் மேற்கொள்ள மத்திய அரசிடம் கூடுதலாக நிதியுதவி கோரப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரச்னை தொடர்பாக பிரதமரைச் சந்திப்பதற்காக, முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அனைத்துக் கட்சி குழு நேற்றிரவு புதுடெல்லி வந்து சேர்ந்தது.
டெல்லி விமான நிலையத்தில் முதல்வர் கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலர் வரவேற்றனர். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:
அனைத்துக் கட்சிக் குழுவின் டெல்லிப் பயணத்தின் நோக்கம் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் வலியுறுத்துவது தான்.
இலங்கை பிரச்னைக்காக மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக விலக்கிக் கொள்வதால், அந்த பிரச்னை தீர்ந்து விடாது. பிரதமரிடம் அளிக்கப்படும் கோரிக்கை மனுவில் தமிழக மீனவர் பிரச்னையும் இடம்பெறும்.
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பட்ட நிவாரண, உதவிப் பொருட்கள் தமிழர்கள் பகுதியில் முறையாக வினியோகம் செய்யப்படுவதாக, மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
தற்போதைய மழையால் தமிழகத்திற்கு வெள்ள- நிவாரண உதவிகள் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இப்பணிக்காக மேலும் நிதியுதவி கேட்டு பிரதமரிடமும், அமைச்சர் ப. சிதம்பரத்திடமும் கோரிக்கை வைக்கப்படும்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|