|
| பிரதமரை சந்தித்தது தமிழக அனைத்துக்கட்சி குழு |
| புதுடெல்லி (ஏஜென்சி), 4 டிசம்பர் 2008 ( 09:06 IST ) | |
இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, முதல்வர் கருணாநிதி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு, பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கை பிரச்னை தொடர்பாக கடந்த மாதம் 25 ஆம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சி சட்டமன்றத் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் பிரதமரை சந்தித்து போர் நிறுத்தம் கொண்டு வர வலியுறுத்துவது என்று, இந்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி நேற்று முன்தினம் தமிழக எம்பி-க்கள் குழு பிரதமரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தது.
இதன் தொடர்ச்சியாக முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள், இன்று காலை 10.20 மணியளவில் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதாகவும், எனவே போர் நிறுத்தம் உடனடியாக கொண்டு வர இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும், பிரதமரை அனைத்துக் கட்சிக்குழு கேட்டுக் கொண்டது. இது தொடர்பான மனுவை பிரதமரிடம் கருணாநிதி அளித்தார்.
இதன் பின்னர், தமிழகத் தலைவர்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.
அனைத்துக் கட்சிக் குழுவில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, வேலு, காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு, பாமக நிறுவனர் ராமதாஸ், அதன் தலைவர் கோ.க. மணி, சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா சரத்குமார், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, எம்.ஜி.ஆர். கழகம் தலைவர் ஆர்.எம். வீரப்பன் உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.
டெல்லிக்கு ஏற்கனவே சென்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியனும், அனைத்துக் கட்சி குழுவுடன் இணைந்து பிரதமரை சந்தித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|