|
| இந்தியாவுக்கு ஒத்துழைக்க பாக்.கிற்கு ரைஸ் வலியுறுத்தல் |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008 ( 19:42 IST ) | |
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அல் - காய்தாவுக்கு தொடர்பு இருப்பதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று கூறியுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கண்டலீஸா ரைஸ், இது தொடர்பான தொடர்பான விசாரணைக்கு வெளிப்படையான ஒத்துழைப்பை இந்தியாவிற்கு பாகிஸ்தான் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையிலும்,பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாகவும், ரைஸ் தனது ஐரோப்பிய பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு இன்று டெல்லி வந்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ரைஸ், மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் அல் காய்தாவுக்கு தொடர்பிருக்கலாம் என்பதை மறுக்கவில்லை என்றும்,இதுபோன்ற தாக்குதல்களை அந்த இயக்கம்தான் நடத்த முடியும் என்றும் கூறினார்.
அதே சமயம் ஆனால், மும்பையில் தாக்குதல் நடத்தியது அல் காய்டாதான் என்ற இறுதி முடிவிற்கு நாம் செல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இத்தாக்குதலில் அல் - காய்தா இயக்கத்திற்கு உள்ள தொடர்பு நேரடியானதா அல்லது மறைமுகமானதா என்பதைக் கூறுவது கடினம்.ஆனால் தொடர்பிருக்கிறது என்பதை மறுக்க முடியாது இந்த விசாரணைகளில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் முழு அளவில் ஒத்துழைப்பு தர வேண்டும். இதை பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தும்.இது போன்ற தாக்குதல்களை நாம் எப்பாடுபட்டாவது தடுத்தே ஆக வேண்டும்.இந்த இக்கட்டான தருணத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா முழுமையாக துணை நிற்கிறது
பயங்கரவாதத்திற்கு எதிராகச் சர்வதேச நாடுகளிடையே ஒத்துழைப்பு அவசியம்.மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் வெளிப்படையாகவும் அவசரம் கருதியும் இந்தியாவிற்கு பாகிஸ்தான் ஒத்துழைப்புத்தர வேண்டும்.
இது தொடர்பாக பாகிஸ்தான் முன்னர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இது சரியான தருணம் ஆகும் என்று மேலும் கூறினார் ரைஸ்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|