யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஐதராபாத்தில் தேடுதல் வேட்டை : போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு
ஐதராபாத்(ஏஜென்சி), 3 டிசம்பர் 2008   ( 17:43 IST )
ஐதராபாத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சோதனை நடத்திய போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியவர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழைய ஹைதராபாத் பகுதியில் உள்ள சந்தோஷ் நகரில் சந்தேகப்படும்படியான நபர்கள் பதுங்கியிருப்பதாகவும், இவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்றும் போலீஸாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அந்தப் பகுதியை முற்றுகையிட்ட போலீசார் ஒவ்வொரு வீடாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இரும்பு பொருட்கள் விற்கும் ஒரு கடையில் சோதனைக்காக போலீஸார் நுழைந்தபோது அங்கு பதுங்கியிருந்த 6 பேர் திடீரென போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு போலீஸார் காயமுற்றனர்.போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்பதால், அவர்களை பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.இதனிடையே துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உள்ளூர்வாசிகள்தான் என்று அப்பகுதி மக்கள் கூறியதாக மற்றொரு தகவல்ம் தெரிவிக்கிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பயங்கரவாதத்திற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் : சோனியா
'நாய் கூடப் போகாது' : வருத்தம் தெரிவித்தார் அச்சுதானந்தன்
ரஷ்ய அதிபர் மெத்வதேவ் நாளை இந்தியா வருகை
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல்
டெல்லி வந்தார் காண்டலீஸா ரைஸ்
தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கை: பிரதமர் உறுதி
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...