|
| பயங்கரவாதத்திற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் : சோனியா |
| யூரி (ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008 ( 16:59 IST ) | |
பயங்கரவாதத்திற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரி அருகே இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சோனியா, பயங்கரவாதிகள் முன்னர் நாம் அடிபணிய மாட்டோம் ; உரிய பதிலடியை கொடுப்போம் என்றார்.
அண்டை நாடுகளுடன் சகோதர மற்றும் நட்புறவுடன் இருக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
நமது அண்டை நாடுகளுடன் நாம் நேசக் கரம் நீட்டுகிறோம்.ஆனால் அதனையே நமது பலவீனமாக கருதிவிடக்கூடாது.
பயங்கரவாதத்திற்கு எந்த ஒரு மதமும் கிடையாது ; மனித நேயம் மற்றும் மனித பண்புகளுக்கு எதிரானவர்களுடன் எவ்வித சமரசமும் கிடையாது.
காஷ்மீர் பிரச்சனையை பொறுத்தவரை அரசியல் சாசன வரம்பிற்கு உட்பட்ட எந்த ஒரு பேச்சு வார்த்தைக்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம் என்று சோனியா மேலும் பேசினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|