|
| 'நாய் கூடப் போகாது' : வருத்தம் தெரிவித்தார் அச்சுதானந்தன் |
| திருவனந்தபுரம் (ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008 ( 16:07 IST ) | |
மும்பையில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் பலியான தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் தம்மை வீட்டினுள் அனுமதிக்காமல் அவமதித்ததால், அந்த வீட்டிற்கு 'நாய் கூடப் போகாது' என்று கூறியதற்காக கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் சட்டப் பேரவையில் இன்று வருத்தம் தெரிவித்தார்.
மும்பையில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் கொல்லப்பட்டார்.பெங்களூரில் உள்ள இவரது வீட்டிற்கு இரங்கல் தெரிவிக்க வந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா சென்ற நிலையில்,உன்னிகிருஷ்ணனின் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த கேரள முதல்வர் ஏன் வரவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.
இது குறித்து சந்தீப் உன்னிகிருஷ்ணனின் தந்தை வருத்தம் மற்றும் கோபமுற்று இருந்தார்.இந்நிலையில், கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தனது அமைச்சர் ஒருவருடன் மேஜர் சந்தீப்பிற்கு இரங்கல் தெரிவிக்கச் சென்றார்.
அப்போது மேஜர் சந்தீப்பின் தந்தை உன்னிகிருஷ்ணன், கேரள முதல்வர் தனது வீட்டில் இருந்து வெளியேறவில்லை என்றால் தற்கொலை செய்வேன் என்று கூறியதால் அச்சுதானந்தன் அவமானமடைந்து வெளியேறியதாக செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், கேரளா திரும்பிய அச்சுதானந்தனிடம் கேட்டபோது, "உன்னிகிருஷ்ணன் ஒரு சாதாரண மனிதர். அவரது மகன் சந்தீப் தேசத்திற்காகப் போராடி இறந்துள்ளார். அவருக்காகத்தான் நான் வந்தேன். இல்லை என்றால் இந்த வீட்டிற்கு ஒரு நாய் கூட வராது. ஒருவேளை இரண்டு முதல்வரும் சேர்ந்து வரவேண்டும் என்று உன்னிகிருஷ்ணன் நினைத்தாரோ என்னவோ?" என்றார்.
அவரது இந்தப் பேச்சிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து அச்சுதானந்தன் சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் உடனடியாக வருத்தம் தெரிவித்ததுடன், அச்சுதானந்தனையும் வருத்தம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் இன்று கேரள சட்டப் பேரவையில் இன்று இப்பிரச்சனையை எழுப்பி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அச்சுதானந்தன் பதவிவிலக வேண்டும் என்றும், அவர் தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின.
இதையடுத்து தனது பேச்சிற்கு அச்சுதானந்தன் சட்டப்பேரவையில் வருத்தம் தெரிவித்தார்
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|