|
| ரஷ்ய அதிபர் மெத்வதேவ் நாளை இந்தியா வருகை |
| புதுடெல்லி / மாஸ்கோ (ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008 ( 12:59 IST ) | |
ரஷ்ய அதிபர் டிமித்ரி மெத்வதேவ் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நாளை புதுடெல்லி வருகிறார். வரும் 5 ஆம் தேதி இந்தியா- ரஷ்யா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
இது தொடர்பாக மாஸ்கோவில் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்ததாவது:
ரஷ்ய அதிபர் மெத்வதேவின் 3 நாள் இந்தியப் பயணத்தின் போது, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் விவாதிக்க உள்ளார். இது தவிர மேலும் பல இந்தியத் தலைவர்களையும் மெத்வதேவ் சந்தித்துப் பேசுவார்.
தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம், இந்த பயணத்தின் போது கையெழுத்தாகும். இதேபோல், புதிய இடங்களில் அணு மின் நிலையம் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்க்கொள்ளப்படும்.
இந்தியாவில் உள்ள அணு உலைகளுக்கு எரிபொருள் அளிக்க வகை செய்யும் அணு சக்தி ஒப்பந்தமும், மெத்வதேவின் பயணத்தின் போது கையெழுத்தாகும்.
இவ்வாறு ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குப் பின்னர் இந்தியாவுக்கு வரும் முதலாவது வெளிநாட்டு அதிபர் மெத்வதேவ் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|